சுற்றுலா பயணிகளின் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் – ஜனாதிபதி

11.06.2022 06:16:11

 நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் அசெளகர்யங்களை எதிர்கொள்வதால் அதனை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோயால் முடங்கியிருந்த சுற்றுலா கைத்தொழில், மீண்டும் இயல்பு நிலைக்கு மாறி வருகையில் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமை காரணமாக மீண்டும் அது வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் பிறநாடுகளிடம் உள்ள இலங்கை பற்றிய தவறான கருத்துக்களை தூதரகங்கள் மூலம் சரிசெய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.ஏ. சூலானந்த பெரேரா, துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.