புடின் படைகளை எதிர்த்து சண்டையிட தயார்

23.11.2024 09:11:28

ரஷ்ய படைகள் ஐரோப்பிய நாட்டிற்குள் நுழைந்தால் பிரித்தானிய படைகள் போரில் உடனடியாக களமிறங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் தங்களின் ஆயுதங்களை ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது பயன்படுத்த அனுமதி வழங்கியதை அடுத்து, உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது மிகவும் பதற்ற நிலையை அடைந்துள்ளது.

   

அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை மற்றும் பிரித்தானியாவின் Strom shadow ட்ரோன்களை பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ரஷ்யாவின் தங்களது புதிய ஏவுகணை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.

அத்துடன் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கடுமையான எச்சரிக்கையும் விடுத்தது.

இந்நிலையில் புடினின் ரஷ்ய படைகள் ஐரோப்பிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தால் பிரித்தானிய ஆயுதப் படைகள் உடனடியாக தாக்குதலில் களமிறங்கும் என பிரித்தானிய இராணுவ தலைவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பாதுகாப்பு குழுவிடம் பிரித்தானிய பாதுகாப்பு படையின் துணைத் தலைவர் ராப் மகோவன் தெரிவித்த தகவலில், பிரித்தானிய படைகளை இன்று தாக்குதல் நடத்த சொன்னால் இன்றே தாக்குதலில் களமிறங்கும் என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய படைகள் நோட்டாவின் கிழக்கு பகுதியில் நுழைந்தால் பிரித்தானிய படைகளின் தயார் நிலை குறித்த எம்.பிக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.