லைகாவின் ‘லாக்டவுன்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைப்பு.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான 'லாக் டவுன்' திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு என்.ஆர். ரகுநாதன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் நடிகர்கள் சார்லி, நிரோஷா, மஹானா சஞ்சீவி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நண்ட நாட்களாக வெளியீட்டிற்காக காத்திருந்த இந்தப் படம், முதலில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று தேதியை படக்குழு மாற்றி கூறியது.
தற்போது, லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு, படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தொடர்ச்சியான ஒத்திவைப்பால், தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா, சமீபத்திய முதலீட்டு இழப்புகளால் இத்தகைய முடிவுகளை எடுக்கிறதோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.