கீழானூர் எஸ்.சி, எஸ்.டி மக்கள் குடியுரிமை ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம்- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் அறிவிப்பு

11.08.2023 10:19:40

திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பட்டியலின மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தி உள்ளது. இந்திய திருநாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. குடிமக்களின் தனிமனித சுதந்திரம், குடியுரிமை சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. சென்னை:  பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்ட காவல் துறையின் போக்கை கண்டித்து அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு பேசினார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக ஏப்ரல் 14 முதல் டிசம்பர் 6 - ந்தேதி வரை சமூக மாற்றம் மற்றும் பொருளாதார விடுதலையை உருவாக்க பகுஜன் யாத்திரை என்ற தலைப்பில் சென்னை மண்டலம் தழுவிய நடைப்பயணம் திட்ட மிடப்பட்டு அந்த நடைப்பயணம் குறித்த நிகழ்ச்சி நிரல், போக்குவரத்து வழித்தடம், நிகழ்வுகள் நடை பெறும் இடங்கள், உள்ளிட்ட எல்லாம் விவரங்களும் அடங்கிய விவர குறிப்புகளுடன் முன்ன தாகவே காவல் துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி நடைபயணத்திற்கான அனுமதியை காவல்துறை மறுத்தது. தற்போது அதே காவல்துறை பாரதிய ஜனதா கட்சி அனுமதி கேட்டவுடன் எவ்வித மறுப்பு மின்றி அனுமதி வழங்கியுள்ளது. சனாதான எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, பேசுகின்ற தி.மு.க. அரசின் இச்செயல் பா.ஜனதாவுடன் அதன் இணக்கமான போக்கை அப்பட்டமாக அம்ப லப்படுத்துகிறது. அதேபோல் பட்டியலின மக்கள் துணை திட்டத்தின் மூலம் ஒதுக்கிய நிதியானது அவர்களின் தனி நபர் வருமான உயர்வு திறன், மேம்பாடு வசதிகள் ஆகியவற்றிற்காக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டி உள்ளது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியி லிருந்து ரூபாய் 1540 கோடியை எடுத்து தமிழக அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ஒதுக்கி உள்ளது. இது திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பட்டிய லின மக்கள் மீது கொண்டுள்ள வன்மத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தி உள்ளது. இந்திய திருநாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. குடிமக்களின் தனிமனித சுதந்திரம், குடியுரிமை சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்ப ட்டுள்ளது. உச்ச நீதிமன்றங்கள் காவல் துறை யினருக்கு வழி காட்டுதல்களை வழங்கியுள்ளது. அவற்றையெல்லாமல் பொருட் படுத்தாமல் திரு வள்ளூர் மாவட்ட காவல்துறை சாதிய வன்மத்தோடு நடந்து கீழானூர் கிராமத்தில் 21 வயது நிரம்பிய பெண் மீதும் 64 வயது நிரம்பிய மூதாட்டி மீதும் கருணையற்ற முறையில் பிணையில் வர முடியாத கொலை முயற்சி உள்ளிட்ட பொய் வழக்குகளை ஜாதிய வன்மத்தோடு திரு வள்ளூர் மாவட்ட காவல் துறை அதிகாரி பதிவு செய்துள்ளார். மக்கள் மனித உரிமைகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் மீது ஜாதிய வன்மத்தோடு பொய் வழக்குகள் பதிவு செய்யப்படு கிறது எஸ்.சி. எஸ்.டி. சமுதாய மக்களின் மீதும் படித்த இளைஞர்களின் மீதும் அவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் விதமாக காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக 110 என்ற விதியை தவறாக பயன்படுத்து கின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி யின் மேற்கு மாவட்ட தலைவர் பகுஜன் பிரேமை கைது செய்து அடுக்காக வழக்கு களை பதிவு செய்து அவரை மக்கள் பணி செய்ய விடாமல் மணல் சவுடு திருடும் மாபியா விடம் பணம் பெற்றுக் கொண்டு நிரந்தரமாக சிறையில் அடைக்க காவல்துறை முயற்சி செய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் இந்த அராஜகத்தை கண்டித்து கீழானூர் பொதுமக்கள் வருகின்ற 15 - ந்தேதி 76- வது சுதந்திரதின நாள் அன்று குடியுரிமை ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் மக்களாட்சி தத்து வத்தின் அடிப்படையில் தேர்த லில் வெற்றி பெற்ற மாபெரும் அங்கீகாரங்களான ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலை வர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பதவி களையும் ராஜினாமா செய்ய உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பொன் கிருஷ்ணன், பெரியன்பன், சத்தியமூர்த்தி, முகமது அப்பாஸ், அம்பேத ஆனந்தன், தேவா, முற்போக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் மார்க்ஸ், மற்றும் கட்சி தொண்டர்கள் 100 - க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்