தல பொங்கலுக்கு ரெடியா?

20.05.2024 07:10:00

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள Good Bad Ugly படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது.
 

துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இவ்வளவு நாளாக படம் ஷூட்டிங் நடந்து முடிந்திருந்தாலும் எந்த அப்டேட்ஸும் பெரிதாக கிடைக்காததால் ரசிகர்கள் தொடர் காத்திருப்பில் இருந்தனர். இந்நிலையில் சமீபமாக விடாமுயற்சி குறித்த அப்டேட்டே இல்லாத நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் Good bad Ugly படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.
 

இந்நிலையில் தற்போது Good bad Ugly படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் மங்காத்தா ஸ்டைலில் அஜித்குமார் தோற்றமளிக்கிறார். மேசை மீது ஏராளமான துப்பாகிகள் உள்ளன. மங்காத்தா போல இந்த படத்திலும் அஜித்குமார் ஒரு ஆண்டி ஹீரோ ரோலில் நடிக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் 2024 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தல பொங்கலை கொண்டாட அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.