இலங்கை அரசாங்கத்தின் நேர்மையற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக ஜெனீவா விவகாரத்தில் தமிழ் தலைவர்கள் ஒன்றிணைவு – உலகத் தமிழர் பேரவை

19.01.2021 11:05:27

சர்வதேச சமூகத்திடமிருந்து நீதியை கோருவதற்கும் தற்போதைய அரசாங்கம் உட்பட இலங்கை அரசாங்கங்களின் நேர்மையற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்கும் தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்துள்ளனர் என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்
ஜெனீவா விவகாரத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் குறித்து ஐலண்டிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இலங்கையின் ஆட்சியாளர்கள் பல்வேறு விதமான வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றிவந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் 11 வருடங்களாக நீதிக்காக காத்திருக்கின்றனர்என சுரேன் சுரேந்திரன்தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சர்வதேசசமூகத்திற்கான தனதுகடப்பாடுகளை பகிரங்கமாக நிராகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள சுரேன் சுரேந்திரன் ஏனைய ஆணைக்குழுக்கள் தெரிவித்தவிடயங்கள் குறித்து ஆராய்வதற்காக இந்த அரசாங்கம் தற்போதுபுதிய ஆணைக்குழுவை அமைக்க முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.


ஒரு சமூகமாக அவநம்பிக்கை விரக்தியின் பிடியில் சிக்குண்டுள்ள நிலையில், அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்தலைவர்கள் சர்வதேச சமூகத்திடமிருந்து நீதியை கோருவதற்கும் தற்போதைய அரசாங்கம் உட்பட இலங்கை அரசாங்கங்களின் நேர்மையற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்கும் ஒன்றிணைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்ளுர் பொறிமுறைகள் மூலம் தமிழ் மக்களிற்கு நீதிகிடைக்கப்போவதில்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவும்அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர் எனவும் சுரேன் சுரேந்தின் தெரிவித்துள்ளார்.