காசா நோக்கி சென்ற நிவாரண கப்பல்கள்.

02.10.2025 08:22:00

காசா நோக்கி சென்ற நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவிற்கான மனிதாபிமான பொருட்களை எடுத்துச் செல்லும் குளோபல் சுமுட் என்ற நிவாரணக் கப்பல் மீது இஸ்ரேலிய இராணுவம் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளது. இது மத்திய தரைக்கடல் பகுதியில் நடைபெறும் இரண்டாவது வழிமறிப்பு நடவடிக்கையாகும்.

புதன்கிழமை சர்வதேச கடல் எல்லைக்குள் நடந்த இந்த சம்பவத்தின் போது இஸ்ரேலின் போர் கப்பல்கள் ஃப்ளோரிடா என்ற பெயருடைய கப்பலை மோதியுள்ளது.

மேலும் தண்ணீர் பீரங்கிகள் மூலம் யுலாரா மற்றும் மீட்டெக் ஆகிய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குளோபல் சுமுட் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் சர்வதேச கடல் பிராந்தியத்தில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கண்டித்துள்ளது.

முந்தைய நிகழ்வின் போது நிவாரண கப்பல்களை வழிமறித்த இஸ்ரேலிய படைகள் போர் மண்டலத்திற்குள் நுழைத்து இருப்பதாக எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.