இந்தியாவில் தொடரும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம்

13.09.2021 05:41:39

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தீர்வின்றித் தொடரும் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் தொடர்ந்து காத்திருப்பு நடைபெற்று வருகிறது.

“11.08.2021முதல் உண்ணாநிலை போராட்டமாக ஆரம்பித்து தற்கொலை முயற்சி  என பலவற்றை கடந்தும் உயரதிகாரிகள்  உறுதியான முடிவு எடுப்பதாக உறுதியளித்த நிலையில், அதற்கான பதில் வரும் வரை எமது காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


இதன் ஒரு பகுதியாக இருளில் ஒளி கிடைக்க நாம் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒளியைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் என்பதை அரசுக்கு தெரிவிக்கும் வண்ணமாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தோம்.

தமிழரசுக்கட்சியின் தன்னாதிக்கத்தை ஏற்கமுடியாது | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் | இலக்கு | ILC
எமது கோரிக்கைகள் முழுமையாக அரசிடம் சென்று அடையாத நிலையில் தமிழக முதலமைச்சர் ஐயா மு க ஸ்டாலின் அவர்கள் எமது நியாயமான கோரிக்கைகளை நேரடியாக தன்னுடைய தனி குழு மூலம் கேட்டறிந்து எமது குறைகளை தீர்த்து வைக்குமாறு தாழ்மையாக எமது காத்திருப்பு போராட்டத்தின் மூலம் கேட்டுக்கொள்கின்றோம்” திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.