
அனைத்து பாரவூர்திகளுக்கும் 25 சதவீதம் வரி.
07.10.2025 13:59:19
எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக பாரவூர்திகளுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி பொருட்களை விநியோகிக்கும் பாரவூர்திகள், குப்பை பாரவூர்திகள் பொதுப் பயன்பாட்டுப் பாரவூர்திகள் , போக்குவரத்து மற்றும் பள்ளிப் பேருந்துகள், கனரக தொழில் வாகனங்கள் ஆகியவை இந்த வரி விதிப்புக்குள் அடங்கும் எனவும் அறிவித்துள்ளார்.
இதனால் இந்த புதிய வரி விதிப்பில் அதிகமாக பாதிக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா மற்றும் மெக்சிகோ உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்க்கது.