டலஸ் வெளியிட்ட இரகசியம்

28.07.2022 15:54:40

 கடைசி நிறைவேற்று அதிபர்

நாடாளுமன்றில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் தாம் தெரிவு செய்யப்பட்டால்,  நாட்டின் கடைசி நிறைவேற்று அதிபராக தான் இருந்திருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28ஆம் திகதி) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து கட்சி அரசாங்கம்

தானும் தனது குழுவினரும் அனைத்து கட்சி அரசாங்கத்துக்காக குரல் எழுப்பியதாகவும், நெருக்கடியை தீர்க்க அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.