ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி!

16.09.2025 07:54:49

ரஷ்யா மற்றும் பெலருஸ் நாடுகள் இணைந்து நடத்தும் ‘Zapad‑2025‘ என்ற மாபெரும் இராணுவப் பயிற்சி, ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக  என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 12 முதல் 16 வரை நடைபெறும் இப் பயிற்சியில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள், Su‑34 போர் விமானங்கள், கனரக ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

 

மேலும், ரஷ்யா வெலருஸ் நிலப்பரப்பில் இடைத் தூர ஏவுகணைகள் (intermediate-range missiles) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா–பெலருஸ் கூட்டணி இந்த இராணுவப் பயிற்சி  “பாதுகாப்பு நோக்கத்துக்காக மட்டுமே” எனத் தெரிவிக்கின்ற போதும்  ஐரோப்பிய நாடுகள் இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக போலந்து, லிதுவேனியா போன்ற நாடுகள், எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு குறித்து கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

“இத்தகைய மிகப்பெரிய ராணுவப் பயிற்சிகள் பிராந்திய நிலைப்பாட்டை பாதிக்கக்கூடும். நிலைமை மேலும் பதற்றமடையும் அபாயம் உள்ளது,”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நிபுணர்கள், இந்த பயிற்சிகள் சாதாரண இராணுவப் பயிற்சி அல்ல எனவும்   தங்கள் சக்தியை வெளிப்படுத்தி, ஐரோப்பாவுக்கும் NATO கூட்டமைப்பிற்கும் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது.

முன்னதாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அதற்கு பதிலாக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related