
ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதன் மூலம் இலங்கையின் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படத் தொடங்கி விட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். விக்கிரமசிங்கவை சிறையில் இருந்து விடுவிக்க அனைத்துக் கட்சிகளும் போராடும் என்றார். |
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கி வைத்து கருத்துரைத்த போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பில் உள்ள அமரி ஹோட்டலில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. "ஜனநாயக சமூகத்தின் பண்புகள் படிப்படியாக மறைந்து வருகின்றன என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, அரசியல் கட்சிகள், நிறங்களை மறந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்த நேரத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் " என அழைப்பு விடுத்தார். |