
ராஜித சேனாரத்னவுக்கு பிணை.
09.09.2025 08:19:05
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிவைப்படுத்தப்பட்ட நிலையில் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இவரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் ராஜித கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.