விஜய் 66 எப்போது அறிவிப்பு வரும் ?

29.07.2021 09:00:00

விஜய்யின் 65வது படமாக உருவாகி வந்த படத்திற்கு 'பீஸ்ட்' என்ற தலைப்பை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் அறிவித்தனர். அவரது பிறந்த தினத்தன்றே 66வது படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படியான அறிவிப்பு எதுவும் வரவில்லை.

விஜய்யின் 66வது படத்தை இயக்கப் போவதாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி கூட ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்படத்தைத் தயாரிக்கப் போவதாக பேசப்படும் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதன் டுவிட்டர் தளத்தில் விஜய்க்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.

நேற்று இயக்குனர் வம்சி பைடிபள்ளியின் பிறந்தநாள். நேற்றாவது விஜய் 66 அறிவிப்பு வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால், வரவில்லை. விஜய் தான் நடித்து வரும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் சமயத்தில்தான் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார். அது போலவே, 'பீஸ்ட்' படப்பிடிப்பு கடைசி கட்டத்திற்கு வரும் போதுதான் விஜய் 66 அறிவிப்பும் வரும் என்கிறார்கள்.