சூர்யாவின் 40 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் !

20.07.2021 21:49:39

 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40 ஆவது திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு  வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் ஜுலை மாதம் 22 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினம் இந்த படத்தின் தலைப்பும் அறிவிக்கப்படவுள்ளது.

சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். டி.இமான் இசையமைக்கிறார்.