மோகன்லாலின் திரைப்படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ்

27.02.2025 09:19:31

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு இப்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் படம் மார்ச் மாதம் 28 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதையடுத்துப் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் வரிசையாக ரிலீஸாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் புகழ்பெற்ற ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியலில் நடித்த ஜொரோம் ப்ளின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதைப் படக்குழு அறிவித்துள்ளது. இவர் ஜான் விக் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.