மேலும் அதிகரித்தது பால்மா விலை!

30.12.2021 06:42:19

உடன் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவை 150 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவை 60 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பைக்கட்டின் புதிய விலை 1,345 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பைக்கட்டின் புதிய விலை 540 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.