தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்
வளைகுடாவில் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளது.
வளைகுடா கடற்பரப்பில் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் தென்கொரியாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளனர் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வளைகுடாவை இரசாயனங்களால் அசுத்தப்படுத்திக்கொண்டிருந்த தென்கொரிய எண்ணெய்கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனஈரானின் தொலைக்காட்சி உட்பட பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹங்குக்செமி என்ற கப்பலை ஈரானின் புரட்சிகர காவல்படையினர் பாதுகாப்பாக அழைத்துவருவதை டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு காண்பித்துள்ளது.

தென்கொரியா வியட்நாம் இந்தோனேசியா மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் அந்த கப்பலில் காணப்பட்டனர் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்கொரியாவை சேர்நத எண்ணெய்கப்பல் பண்டார் அபாஸ் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது எனவும் டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தென்கொரியா தனது நாட்டை சேர்ந்த எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியுள்ளதை உறுதி செய்துள்ளதுடன் கப்பலில் 20 பேர் காணப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.
கப்பலையும் கைதுசெய்யப்பட்டவர்களையும் உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் என தென்கொரியா வேண்டுகோள் விடுத்துள்ளது