200 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

04.01.2022 12:54:10

 காலம் தவறி பெய்த கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வில்லிவாக்கம் ஒன்றியம் கீழ்க்கொண்டையார், கர்லபாக்கம், கதவூர், பாக்கம், பாண்டேஸ்வரத்தில் நெற்பயிர்கள் மூழ்கின.

பாலவேடு, அரக்கம்பாக்கம் மற்றும் சுற்று கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. அடுத்த 15 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் காலந்தவறி பெய்த கனமழையால் நீரில் மூழ்கின. அதிக மகசூல் தரும் பாபட்லா, 43 மற்றும் 1010 நெல் ரகங்கள் போதிய வடிகால் வசதியின்றி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.