டெல்லிக்கு விஜயம் மேற்கொள்கின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

18.07.2021 15:28:03

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொள்கின்றார்

இவ்வாறு டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நாளை சந்திக்கவுள்ளார்.

இதன்போது தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாகவும் முதலமைச்சர் குடியரசுத் தலைவரிடம் கலந்துரையாடுவார் எனவும் கூறப்படுகின்றது.