பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியது லதா மங்கேஷ்கரின் சிறப்பு: பிரதமர் மோடி
07.02.2022 15:22:09
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றி வருகிறார். பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் தனது உரையை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர்; வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு சிறந்த உதாரணமாக லதா லதா மங்கேஷ்கர் திகழ்ந்துள்ளார். பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியது லதா மங்கேஷ்கரின் சிறப்பு என புகழாரம் சூட்டினார்.