நடிகை கராத்தே கல்யாணி புகார்...!
பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி ஐதராபாத் நகரில் உள்ள சைராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்,'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' எனும் இந்து சிலோகங்களை, அவர் சமீபத்தில் வெளியிட்ட தனிப்பட்ட பாடலில் பயன்படுத்தியுள்ளார் .இதனால், தானும், தான் சார்ந்த இந்து சமூகம் புண்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் "ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா' என்ற சுலோகத்தை இந்துக்களின் புனித கடவுளான ராமரை வணங்கும்போது நாங்கள் பயன்படுத்துவோம். அந்த சுலோகத்தை ஆபாசமான காட்சிகள் நிறைந்த பாடலில், பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பயன்படுத்தியுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது" என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்துகளை புண்படுத்தியதற்காக தேவி ஸ்ரீ பிரசாத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கரோத்தே கல்யாணி வலியுறுத்தியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் இந்தியாவின் முதல் பான்-இந்தியன் பாப் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். 2 கோடி பார்வையாளர்களை கடந்த அந்த பாடல்தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், நடிகை அளித்த புகாரை அடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.