முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.

27.02.2025 09:37:51

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருக்கழுக்குன்றத்தில் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக நிர்வாகி மீது நடந்த மீதான தாக்குதலை கண்டித்து, திருக்கழுக்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு முன்பே, போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதாகவும், இதனை அடுத்து, காவல்துறை நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.