மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!

20.08.2021 11:08:56

மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில்கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக இன்றுமுதல் 29ம் திகதிவரை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளதாக வர்த்தக சங்க தலைவர் கே.செல்வராசா தெரிவித்தார்.

அதன் காரணமாக இன்று வர்த்தக நிலைங்கள் மூடப்பட்டிருந்தன.
பாமசிகள் உட்பட அத்தியாவசிய பொருள் விற்பனை நிலைங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று உங்கள் வீடுகளில் இருந்து ஒருவரை மட்டும் வெளியில் அனுப்பி அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு மட்டக்களப்பு வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் எமது மாவட்டத்தை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எமது சங்கத்தின் ஒரே குறிக்கோள், அதனாலேயே இந்த முடிவை எமது அனைத்து வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் ஏற்று எமது மக்களை காப்பாற்ற முன்வரவேண்டுமென இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.