நடிகை சாய் பல்லவியின் ‘ஓம்’ திரைப்படம்.

27.10.2026 08:16:45

நடிகை சாய் பல்லவி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

 

நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ‘ரங்கூன்’, ‘அமரன்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் பெற்ற இவர், தற்போது ‘ஓம்’ திரைப்படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

 

இத்திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி முதன்முறையாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில், இப்படத்தில் நித்யா ரெட்டி என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளதாகக் காட்டும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 

சாய் பல்லவி நடிப்பில் ‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 5ஆம் திகதியும், ‘ஓம்’ திரைப்படம் நவம்பர் 20ஆம் திகதியும் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.