உக்ரைனுக்கான உதவிகளை அதிகரிக்கும் பிரித்தானியா!

08.03.2024 08:39:08

உக்ரைனுக்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

 

அதன்படி ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்கு 10 ஆயிரம் ஆளில்லா விமானங்களை வழங்குவதாக பிரித்தானியா கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதல்களால் உக்ரைன் பலத்த சேதத்தை சந்தித்து வருகிற நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை முன்னதாக, உக்ரைனுக்கு வழங்குவதற்காக 256 மில்லியன் டொலர் நிதியுதவிரைய பிரிட்டன் அறிவித்தது. மேலும், இந்த ஆளில்லா விமானங்களுக்காக மேலும் 160 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயுதப் பொதியில் ஆயிரம் கமிகேஸ் என்ற ஒரு வழி தாக்குதலுக்கான ஆளில்லா விமானங்கள் இருக்கும். இவற்றின் மூலம் கப்பல்களை குறிவைத்து தாக்க முடியும் என்றும் பிரித்தானியா வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படையை உக்ரைன் படைகள் திறம்பட தாக்கி வருவதாக கூறப்படுகிறது.