யாழ்ப்பாண நகர பிதா மணிவண்ணனும் நகரசபை உறுப்பினர்களும் நோர்வே சென்றடைந்தனர்

06.05.2022 07:02:08

யாழ்ப்பாண நகர பிதா மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தலைவர் மயூரன் மற்றும் யாழ்ப்பாண நகரசபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் நோர்வே நாட்டை சென்றடைந்துள்ளனர் .

இவர்கள் பேர்கன் நோர்வே நகரபிதா, பேர்கன் நோர்வே மாநகர சபை உறுப்பினர்கள், பேர்கன் பல்கலைக்கழகம்,  மற்றும் தமிழ் உறவுகளையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

கடந்த மே 4ஆம் திகதியிலிருந்து 7ஆம் திகதிவரை பேர்கன் மண்ணில் யாழ் மண்ணின் அபிவிருத்திக்கான செயல்திட்டங்களை மேற்கொள்ளவும், ஒரு சிறந்த உறவுப் பாலத்தினை அமைக்கவும் இவர்கள் நோர்வே நாட்டுக்கு சென்றுள்ளதாக அறியமுடிகின்றது. 

மேலும்  அங்குள்ள பொது அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், சுகாதார நிறுவனங்கள், உதவி அமைப்புகள் போன்றவற்றையும் இவர்கள் சந்தித்து வருகின்றனர். 

இவர்களை நோர்வே நாட்டுக்கு அழைத்து சகல ஒழுங்குகளினையும் மேற்கொண்டு வருகின்றனர் பேர்கன் தமிழ் சங்கத்தினர். பேர்கன் தமிழ் சங்கமானது 1977ம் ஆண்டில் நோர்வே நகரில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தமிழ் சங்கமாகும்.