மக்கள் நீதிபதி கிருபாகரனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
20.08.2021 10:54:14
தமிழ்நாடு நலன்களை காக்கும் பல்வேறு தீர்ப்புகளை அளித்த மக்கள் நீதிபதி கிருபாகரனுக்கு மனதார வாழ்த்துக்கள் என்று கமல் தெரிவித்துள்ளார்.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், டிக் டாக், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது உட்பட 12 ஆண்டுகால பணியில் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.