’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’

28.05.2024 07:05:00

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய ’இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஜூன் 7-ம் தேதி ‘இந்தியன்’ படத்தை வெளியிட தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் முடிவு செய்துள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்தின் மூன்று நிமிட ட்ரெய்லரை அசத்தலாக கட் செய்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது மீண்டும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. 

‘இந்தியன்’ படத்தை பார்த்துவிட்டு அதன் பின் ’இந்தியன் 2’ படத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு கதை கோர்வையாக புரியும் என்பதற்காக தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம் இந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சரியான நேரத்தில் ‘இந்தியன்’ படம் ரீரிலீஸ் ஆவதால் இந்த படம் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்பட பலரது நடிப்பில் உருவான ‘இந்தியன்’ திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பதும் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.