தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை

19.11.2021 09:25:39

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புளியரசன் பேட்டியளித்தார். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோட்டில் கனமழை பெய்யக்கூடும் என கூறினார்.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

புதுச்சேரியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.