முகக்கவச பயன்பாடு அபாயத்தை பாதியாகக் குறைக்கும்
20.11.2021 10:24:52
முகக்கவச பயன்பாடு கொரோனா அபாயத்தை பாதியாகக் குறைக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய வைத்திய இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் கூட மீண்டும் கொரோனா தொற்று தலை தூக்கியுள்ளமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதிகளவான நாடுகள் தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கை காரணமாக சமூக கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளமை அபாயகரமானது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.