சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை நிறைவேற்றம்!

29.11.2024 07:54:59

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு அவுஸ்திரேலியா வியாழனன்று (28) ஒப்புதல் அளித்தது.

இதற்கு அமைவாக 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் டிக்டோக், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், ரெடிட், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ள சமூக தளங்களை அணுகுவது தடை செய்யப்படும்.

வியாழன் அன்று செனட் சட்டமூலத்தை 34:19 வாக்குகளால் நிறைவேற்றியது. புதன்கிழமைய பிரதிநிதிகள் சபை 102:13 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டத்தை அங்கீரித்தது.

எனினும், குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு இந்த தடை நடைமுறைக்கு வராது.

தடை உத்தரவு நடைமுறைக்கு வந்ததும் அதனை மீறும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ($32.5m; £25.7m) அபராதமாக விதிக்கப்படும்.

இந்த சட்டம், சிறுவர்கள் தொடர்பான ஆன்லைன் பாதிப்புகள் குறித்து கவலைப்படும் பெற்றோருக்கு ஆதரவாக அமையும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) தெரிவித்துள்ளார்.