இந்தியா செல்ல முயன்ற 2 பெண்கள் கைது

15.06.2022 17:01:56

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த இரண்டு பெண்கள், ஆண் குழந்தை ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்கரையோரத்தில் நேற்றிரவு கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கிளிநொச்சியை சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இரண்டு பெண்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் ஒன்றரை வயதான ஆண் குழதை இருப்பதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.