
பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன்.
23.04.2025 08:17:00
விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படு மாஸாக தயாராகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய்யுடன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட் பலர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். |
விஜய்யின் கடைசிபடம் என்பதால் ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இன்னொரு பக்கம் படத்தின் வியாபாரமும் சூடு பிடிக்க நடக்கிறது. இப்படத்தின் தமிழக உரிமையினை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை கைப்பற்ற முன்னிலையில் உள்ளார் என தகவல் வந்தது. இந்த நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமையை ரூ. 90 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. |