இந்தியாவின் இருவேறு இடங்களில் வெடி விபத்து

29.06.2024 09:08:13

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், வெடி விபத்தில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விபத்து குறித்து சாத்தூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஷாத்நகரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு,15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

வெடிவிபத்தின் தாக்கத்தால் பல தொழிலாளர்கள்  உடற்பாகங்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவம் தொடர்பில்  பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.