வசூலை அள்ளிய விஜய்சேதுபதியின் மகாராஜா.

09.07.2024 07:05:00

தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண நடிகராக இருந்து இன்று மிகப்பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. வில்லன், ஹீரோ, குணசித்திர கதாபாத்திரம் என எது கொடுத்தாலும் அதில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய்சேதுபதி தனது 50வது படமான மகாராஜா படத்திலும் ஸ்கோர் செய்திருந்தார். மகாராஜா ஜூன் 14 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய நிலையில், இத்திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 4 Reasons Why You Should Consider a Personal Loan for Urgent Financial Needs குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள படம் 'மகாராஜா'. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, முனிஷ்காந்த், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். மகாராஜா: சலூன் கடை வைத்து இருக்கும் விஜய்சேதுபதி (மகாராஜா) என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இவர் காவல்நிலையத்தில், காயத்துடன் லட்சுமி காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். பதறிப்போன போலீசார் லட்சுமி யார் மனைவியா.. மகளா என விசாரிக்கும் போது அது மதிக்கத்தகாத ஒரு குப்பை தொட்டி என்று தெரிகிறது. இதனால் போலீசார் இதற்கு எல்லாம் கேஸ் கொடுக்க முடியாது என்று சொல்ல, போலீஸாருக்கு லஞ்சம் தருகிறேன் என விஜய் சேதுபதி பேசி முடிக்க. நட்டி நட்ராஜ் அந்த லட்சுமியை தேடத் தொடங்குகிறார். அதன் பின்னர் பல திடுக்கிடும் விஷயங்களை கொண்டு ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக கதையை நகர்த்தி இருந்தார் இயக்குநர். ரூ.100 கோடி வசூல்: இப்படத்தை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டிய நிலையில், தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்தனர். அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த இத்திரைப்படம், உலகம் முழுவதும் படம் ரூ.100 கோடியை வசூலித்தது. வழக்கமாக எந்த நடிகர்களுக்கும் 50வது படம் திறப்பாக அமையாத நிலையில், விஜய் சேதுபதிக்கு இப்படம் ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கி உள்ளார் விஜய் சேதுபதி.