வடபழனி கோயிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தரமற்ற பிரசாதங்கள் பறிமுதல்
23.03.2022 16:32:42
சென்னை வடபழனி கோயிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தரமற்ற பிரசாதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லட்டு, தட்டு வடை, அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிரசாதங்கள் தரமான முறையில் தயாரிக்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை நடத்தியது.