அநுர தரப்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!

04.06.2025 08:50:16

கொழும்பு மாநகர சபை மேயராக ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்த அனுபவமிக்க நபருக்கு திசைக்காட்டியில் உள்ள சிலர் வாக்களிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்த நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்த நபருக்கும் இடையிலான அனுபத்தையும் இடைவெளியையும் புரிந்துகொண்டு, அவர்கள் இவ்வாறு வாக்களிக்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு மாநகர சபையை தொடர்ந்து 20 ஆண்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிவதாக முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

 

நல்ல நிர்வாகம் 

 

இந்த நிலையில், நல்ல நிர்வாகத்துடன் கூடிய ஒரு மாநகர சபையாக கொழும்பு மாநகர சபை முன்னேறுவதற்கு குறித்த தரப்பினர் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு நகர்ப்புறவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட ஒருவரை மேயராக நியமிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.