பயங்கரவாதிகளின் பெரியம்மை காய்ச்சல் தாக்குதலை எதிர்கொள்ள உலக தலைவர்கள் தயாராக வேண்டும் !

07.11.2021 10:43:16

வருங்காலத்தில் பெரியம்மை காய்ச்சலை ஒரு உயிரியல் ஆயுதமாக, பரபரப்பான விமான நிலையங்களில் பயங்கரவாதிகள் பயன்படுத்தக் கூடும் என்று கோடீஸ்வரர் பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

பயங்கரவாதிகளின் பெரியம்மை காய்ச்சல் தாக்குதலை எதிர்கொள்ள உலக தலைவர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனமானது பில்லியன் டொலர்கள் கட்டமைப்பு கொண்ட குழு ஒன்றையும் நிறுவ வேண்டும் என பில்கேட்ஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பான ஆய்வுகள், கண்டிப்பாக செலவு அதிகம் கொண்டதாக இருக்கும், ஆனால் அதிக பலனைத்தருவன என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தாராளமாக செலவு செய்ய முன்வர வேண்டும் எனவும், இதனால் அடுத்த தொற்றுநோய்க்கு உலக நாடுகள் தயாராகிவிடும் என்றார்.