வாழ்க திராவிட மாடல் ! சீமான் பரிகாசம்

23.05.2022 09:37:58

 

 தமிழகத்தை ஆளும் திமுக அரசின் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரிகாசம் செய்துள்ளார். 

சமீபத்தில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் ஒன்று வெளியானது.

இப்படத்தை பார்த்த திமுக அரசின் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் புகழந்து தள்ளினர்.

அதுமட்டுமின்றி பல இப்படத்தை பார்க்க இலவச டிக்கெட்டுகளுடன், பணம் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் செயல்பட்ட திமுக அரசின் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சீமான் பரிகாசம் செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள்.

டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்.படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்! என சீமான் பரிகாசம் செய்துள்ளார்.