இருசக்கர வாகனங்கள் ஓட்டி சாகசம் 18 பேர் கைது

23.03.2022 16:30:11

சென்னையில் அபாயகரமாக இருசக்கர வாகனங்கள் ஓட்டி சாகசம் செய்ததாக கடந்த 4 நாட்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெரினா ராதாகிருஷ்ணன் சாலையில் சாகசத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு, 21 விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.