உதயநிதியிடம் கோவை தெற்கு தொகுதி பிரச்சினையைக் பற்றி பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்

18.09.2022 10:57:25

சட்டமன்றத் தேர்தல் முடிந்து இத்தனை மாதங்கள் கடந்த நிலையில், கமல்ஹாசனுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்திருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் கோரிக்கை மனுக்களையும் பெற்று சென்றார். இந்தநிலையில் தொகுதிக்குள் வந்து சென்ற கமல்ஹாசன் குறித்து பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், சட்டமன்றத் தேர்தல் முடிந்து இத்தனை மாதங்கள் கடந்த நிலையில், கமல்ஹாசனுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்திருக்கிறது.

பொதுமக்களிடம் கமல்ஹாசன் மனு வாங்கக் கூடாது என்று தாம் சொல்லவில்லை என்றும் தாராளமாக வாங்கலாம் ஆனால் அதனை வாங்கிக் கொண்டு போய் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தீர்வு வழங்கலாம் என கமல் நினைக்கக் கூடாது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கமல்ஹாசன் நேரடியாக களத்திற்கு வந்து தாம் என்ன செய்யப் போகிறேன் என்பதை விளக்க வேண்டும். "கோவை தெற்கு தொகுதியில் கமல் நேற்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு கழிப்பறை கட்டி தருகிறேன்,

சுத்தம் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நான் வேண்டுமானல் எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறது என்று லிஸ்ட் தருகிறேன் என்றார். உதயநிதியோடு படம் சம்பந்தமாக கமல் பேசும் போது,கோவை தெற்கு தொகுதி பிரச்சினையைக் பற்றி பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

சூட்டிங் கிடையில் இது போன்று, டைம்பாஸுக்காக வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அமைச்சர்களைத் தாண்டி, பவராக இருப்பவர் உதயநிதி தான், நான் சட்டமன்றத்தில் நேரில் பார்க்கிறேன் முதல்-அமைச்சருக்கு வணக்கம் வைப்பதை விட உதயநிதிக்குத் தான் அனைவரும் முதலில் வணக்கம் வைக்கிறார்கள்.