தமிழ்நாடு கவர்னராக பணியாற்றும் அனுபவம் புதுமையானது- மனம் திறந்த கவர்னர் ஆர்.என்.ரவி

22.01.2023 15:07:48

தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழமையானது. தமிழின் செழுமையை நாடு முழுவதும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று கிண்டி ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டில் கவர்னரின் அனுபவம் பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது:- 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி, தற்போது தமிழ்நாடு கவர்னராக பணியாற்றும் அனுபவம், புதுமையானது. திடீரென மத்தியில் ஆட்சி மாறியதும், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றுமாறு பிரதமர் என்னை கேட்டுக் கொண்டார்.

நான் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டேன். மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இடம் என்பதால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட நான் அங்கு சென்றேன். நான் ஐ.பி.எஸ். பணியில் கேரள பிரிவு அதிகாரியாக இருந்தேன். தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்தபோது அதற்கும் இங்குள்ள மொழி மற்றும் மக்களும் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன்.

இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷ யங்களை தெரிந்து கொண்டேன். நான் இப்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாக படிக்க முடிகிறது. இது ஒரு அற்புதமான இடம்.