குருந்தூர்மலை இன்று போராட்டம்!

04.06.2025 08:43:01

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் முன்பாக இன்று மதியம் 12 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.