எளிய முறையில் நடந்த ‘பிகில்’ பட ஒளிப்பதிவாளர் திருமணம்

25.04.2021 10:44:26

கொரோனா ஊரடங்கு காரணமாக, ‘பிகில்’ பட ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் திருமணம் மிக எளிய முறையில் நடைபெற்றது.

விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல், பிகில் மற்றும் தெலுங்கில் ரவிதேஜா, சுருதிஹாசன் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற கிராக் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மஹாலட்சுமி என்பவருக்கும் இன்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் திருமணம் நடைபெற்றது.