இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள் குறித்த அறிவிப்பு!

28.07.2023 14:00:00

2023 ஜூலை முதலாம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரை 123,503 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை மேம்பாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி இவ்வருடம் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 748,377 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.