ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் ஐபிஎல் போட்டியின் போது ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 22 ஆம் திகதி புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
டான் நடிகர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியைக் காண அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இருந்தபோது, அவர் நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட்டார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அகமதாபாத்தில் ஈரப்பதமான வெப்பநிலை காரணமாக ஷாருக்கானின் உடல்நிலை மோசமடைந்ததுடன் சிகிச்சைக்காக கேடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தினர், அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அகமதாபாத் பொலிஸார் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட் கூறினார்.
பின்னர், அவரது மனைவி கவுரி கான் மற்றும் தோழி ஜூஹி சாவ்லா, அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். நடிகரின் உடல்நிலை குறித்து ஷாருக்கானின் குடும்பத்தினரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.