44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்

15.07.2022 11:11:00

பொள்ளாச்சி ஜெயராமன், விஜயபாஸ்கர் உள்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை வானகரத்தில் கடந்த 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இருப்பினும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள், 5 மாவட்ட செயலாளர்கள் உள்பட 18 பேர் நேற்று கூண்டோடு கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதற்கு,பதிலடியாக எடப்பாடி பழனிசாமி உட்பட 22 நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். இந்நிலையில் இன்று சி.விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், பெஞ்சமின் உள்ளிட்ட 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.