விஜய் வந்தால்தான் NDA வெற்றி பெறும் என்ற நிலை இல்லை.
விஜய் வந்தால் தான் வெற்றி பெறும் என்ற நிலைமை இல்லை என பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணியான என்.டி.ஏ கூட்டணிக்குள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை இழுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் பரவுகின்றன. ஆனால், இந்த கூட்டணிக்கு விஜய் வரமாட்டார் என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜய் வந்தால் தான் என்.டி.ஏ வெற்றி பெறும் என்ற நிலை இல்லை என்றும், அவர் இல்லாமலே நாங்கள் ஜெயிப்போம் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுகவை வீழ்த்துவதற்கான பலத்தை பெற வேண்டும் என்றால், இன்னொரு பலத்துடன் அவர் சேர வேண்டும் என்பதே விஜய்க்கு நான் சொல்லும் அறிவுரை என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனியாக அவரால் எதையும் சாதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.