பிரான்ஸ், இத்தாலி ஜேர்மனியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

24.05.2021 12:38:23

 

ஐரோப்பாவில் அதிக தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிரான்ஸில் புதிதாக 12 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 55 இலட்சத்து 93 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு மேலும் 89 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 108,526 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இத்தாலியில் 4,717 புதிய நோயாளிகளும் 125 சிறப்புக்களும் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி 4,188,19 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 125,153 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு ஜேர்மனியில் மேலும் 6,419 பேருக்கு கொரோனா தொற்றும் 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஜேர்மனியில் 3,653,019 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 87,960 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.